கலிபோர்னியா: அமெரிக்காவின் கலிபோர்னியாவில் சோதனை ஓட்டத்தின் போது ராணுவ விமானம் விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள அமெரிக்க விமானப்படை தளத்தில் பி-52 ரக போர் விமானம் ஒன்று வழக்கமான சோதனைப் பயணத்தில் ஈடுபட்டது. விமானம் ஓடுபாதையில் இருந்து புறப்பட்ட சில நொடிகளிலேயே கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து நொறுங்கியது. தொடர்ந்து ஏற்பட்ட தீ விபத்தில் விமானம் முழுவதுமாக எரிந்து சாம்பலானது.
இந்த விபத்தில் விமானத்தில் இருந்த ராணுவ வீரர்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட 8 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விபத்துக்கான காரணம் குறித்து அமெரிக்க ராணுவம் விசாரணை மேற்கொண்டுள்ளது.