சட்டப்பேரவையில் பேசிய திமுக உறுப்பினர் சிவசங்கர், ஆளுநர் உரையை இயக்குநர் Atlee இயக்கும் திரைப்படங்களுடன் ஒப்பிட்டு விமர்சித்தார். பல படங்களை வெட்டி, ஒட்டி ஒரு படம் உருவாக்குவது போல, திமுக அரசின் சாதனைகளை தொகுத்து தவெக அரசு ஆளுநர் உரையை தயாரித்துள்ளதாக அவர் சாடினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் ராஜ்மோகன், வார்த்தை விளையாட்டுகளை தவிர்த்து ஆக்கப்பூர்வ அரசியலை பேச வேண்டும் என அறிவுறுத்தினார்.