தமிழகத்தில் நாளை 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல சுழற்சி காரணமாக பல பகுதிகளில் மழை தொடரும் என கணிக்கப்பட்டுள்ளது. நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.
திருநெல்வேலி மலைப்பகுதிகளுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜூன் 22-ம் தேதியும் சில மாவட்டங்களில் கனமழை நீடிக்கும். சென்னையில் இடி, மின்னலுடன் லேசான முதல் மிதமான மழை பெய்யலாம். ஜூன் 24 வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மக்கள் மற்றும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!
Leave a comment