தமிழக சட்டமன்றத்தில் ஆளுநர் உரை மீதான விவாதத்தின் போது, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் குற்றச்சாட்டுகளுக்கு தவெக அமைச்சர்கள் கடுமையான பதிலடி கொடுத்துள்ளனர். திமுக ஆட்சியில் போதைப்பொருள் புழக்கமும், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களும் 40% அதிகரித்திருந்ததாக பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா குற்றம் சாட்டினார். மேலும், “நான் முதல்வன்” திட்டம் முடக்கப்படாது என்று தெளிவுபடுத்திய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே பதவிகளுக்கு வந்த நிலையை மக்கள் மாற்றியுள்ளனர் என விமர்சித்தார்.