By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    “துபாய் வருவதற்கு முன் பலமுறை யோசியுங்கள்” – இந்திய சமையல்காரரின் வீடியோ வைரல்
    1 Min Read
    சவுதிக்கு ராணுவ உதவி! வானில் பறக்கும் போதே விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் பிரிட்டன்
    3 Min Read
    அமெரிக்காவில் விமானப் போக்குவரத்து முடக்கம்! தொலைத்தொடர்பு இணைப்பு துண்டிப்பால் நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து
    1 Min Read
    துனிசியாவில் கனமழை: வெள்ளத்தில் சிக்கிய நகரங்கள் – மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!
    1 Min Read
    வெள்ளை மாளிகையில் தடை – டிரம்ப் அறிவிப்பால் பரபரப்பு!
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    ரூ.2,700 மருந்துக்கு ரூ.27,000 எம்.ஆர்.பி.? – உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தி
    1 Min Read
    பெற்றோர்களே…உங்கள் குழந்தையை எப்படி நன்கு சாப்பிட வைப்பது?
    2 Min Read
    உங்கள் குழந்தை அறிவாளியாக வளர இவற்றை கற்றுக்கொடுங்கள்!
    2 Min Read
    விடுதியில் ரகசிய வேட்டை… காரில் சிக்கிய யானைத் தந்தங்கள்: வயநாட்டில் 5 பேர் கைது
    1 Min Read
    “நவம்பரில் திரும்பி வருவதாக சொன்னான்…” கனடா விமான விபத்தில் உயிரிழந்த புதுச்சேரி இளைஞரின் குடும்பம் கண்ணீர்
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    36 அரசு அலுவலகங்களில் அதிரடி சோதனை: ரூ.1.73 கோடி கணக்கில் வராத பணம் பறிமுதல்
    1 Min Read
    எதற்கெடுத்தாலும் கோபம் கொள்ளும் குழந்தையை கையாள்வது எப்படி?
    3 Min Read
    தவறு செய்யும் குழந்தைகளை இனிமேல் அடிக்காதீங்க…! Vd;
    2 Min Read
    சிவப்பு அரிசியில் நிரம்பியுள்ள அதிகளவு நார்ச்சத்துக்கள்
    1 Min Read
    மார்பக புற்றுநோய் நம்மை அண்டாமல் தடுக்க..!
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: கருத்து வேறுபாடுகளை ஆரோக்கியமான முறையில் கையாள்வது பற்றி தெரியுமா?
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > தமிழகம் > கருத்து வேறுபாடுகளை ஆரோக்கியமான முறையில் கையாள்வது பற்றி தெரியுமா?
தமிழகம்

கருத்து வேறுபாடுகளை ஆரோக்கியமான முறையில் கையாள்வது பற்றி தெரியுமா?

Nagaraj
Last updated: August 8, 2026 6:52 pm
By Nagaraj 2 Min Read
Share
SHARE

சென்னை: உறவுகளுக்கு இடையிலும் சண்டை, சச்சரவுகள் வருவது இயற்கை. ஒரே குடும்பத்தில் பிறந்த குழந்தைகளுக்குள்ளேயே பல மாற்றுக்கருத்துகள் இருக்கிறது. ஆகவே வெவ்வேறு குடும்பத்தில் பிறந்து, வளர்ந்து திருமணத்திற்குப் பின் ஒன்றாக பயணிக்கும்போது பல கருத்து மாறுபாடுகள் வரத்தான் செய்யும். இந்த பதிவில் மோதல்களை ஆரோக்கியமான முறையில் கையாளுவது எப்படி என்று பார்க்கலாம்.

விஷயத்தை முழுவதும் உள்வாங்கிக் கொள்ளாமலேயே பாதி கேட்டும் கேட்காமல், இப்படித்தான் இருக்கும் என்று எண்ணித்தான் பெரும்பாலான மோதல்கள் ஆரம்பமாகின்றது. காது கொடுத்துக் கேட்டாலே பாதிப் பிரச்சனை தோன்றாது. அதுவும் இக்காலத்தில் எப்போதும் போன் கையில் வைத்துக்கொண்டு கண்கள் அதைப் பார்த்துக்கொண்டுதான் வாதங்கள் நடக்கிறது.

அது விஷயத்தை விளக்குவோருக்கு பெரும் எரிச்சலை ஏற்படுத்தும். சிலர் அதை வேண்டுமென்றே செய்வார்கள். இதை நிச்சயம் தவிர்த்தால், பூதாகரமாக வெடிக்கப்போகும் பல மோதல்களை முன்கூட்டியே ஒன்றுமில்லாமல் செய்து விடலாம். ஒருவர் செய்வது உங்களுக்கு பிடிக்கவில்லையென்றால் அடுத்தவரைக் குறைகூறிக் கொண்டிராமல், அந்த செயலால் உங்களுக்கு என்ன உணர்வு ஏற்படுகிறது என்று கூறுங்கள். இதனால் ஒரு மோதலை தவிர்த்து உங்கள் உணர்வைப் புரிந்து கொண்டு மறுபடியும் அந்த செயலைச் செய்யாமல் இருப்பார்கள்.

“நீ செய்வாய் என்று கூறிவிட்டு இப்போது மறந்துவிட்டதால் நான் மிகவும் வருத்தப்படுகிறேன்” என்று கூறுவதற்கும், “நீ எல்லாவற்றையும் மறந்துவிடு, நீ மிகவும் சோம்பேறியாகிவிட்டாய், எனக்கு எந்த உதவியும் செய்வதில்லை” என்று கூறுவதற்கும் மிகப் பெரிய வித்தியாசம் இருக்கிறது.

பெரும்பாலும் நம்முடைய கண்ணோட்டம்தான் சரியானது அது மற்றவர்க்கு கட்டாயம் புரியவேண்டும் என்று எண்ணுபவர்களே அதிகம். அதை விடுத்து, உங்களவருக்கு உங்கள் கண்ணோட்டம் புரிந்ததா என்று கேட்டுப்பாருங்கள். நிச்சயம் அவருக்கும் அந்த உணர்வு இருக்காது. அதனால்தான் மோதல் ஆரம்பம் ஆகிறது. உதாரணத்திற்கு, நீங்கள் சிறுவயது முதல் பார்த்துப் பழகிய ஒரு தோழி உங்களுக்கு மிகவும் நெருக்கமானவராக உணர்வீர்கள்.

அதனால், அவருடன் நேரம் செலவிடுவதும், அவர் அழைக்கும் விருந்திற்கு செல்வதை வாழ்க்கையில் மிகவும் முக்கியமான ஒன்றாகக் நீங்கள் கருதுவீர்கள். ஆனால், உங்கள் கணவருக்கு அதே உணர்வு இருக்க வேண்டும் என்று எண்ணுவதும், அவரை வலியுறுத்துவதும் நிச்சயம் ஒரு கருத்து வேறுபாட்டிற்கு தயாராகிறீர்கள் என்று அர்த்தம். இங்குதான் நீங்கள் மற்றவர்களின் கண்ணோட்டத்தையும் மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும்.

கருத்து வேறுபாட்டில் யார் கூறுவது சரி என்ற வாதத்திலேயே நேரம் செலவிடாமல், உங்கள் கருத்து வேறுபாட்டிற்கு என்ன காரணம் என்று கண்டறிந்து அதற்கு தீர்வுகானப் பாருங்கள். ஒரு பிரச்சனை தெரிந்தோ தெரியாமலோ ஏற்பட்டுவிட்டது. அதையே, “நீ ஏன் இப்படி செய்தாய், நான் கூறியதுபோல செய்திருந்தால் இப்படி நேர்ந்திருக்குமா?” என்று பேசிக்கொண்டிராமல், அடுத்து இருவரும் சேர்ந்து என்ன செய்தால் அந்த பிரச்சனையில் இருந்து சுலபமாக விடுபடலாம் என்று கலந்தாலோசித்தால் உங்களைப் பாத்து மற்றவர்கள் கற்றுக்கொள்வார்கள்.

You Might Also Like

36 அரசு அலுவலகங்களில் அதிரடி சோதனை: ரூ.1.73 கோடி கணக்கில் வராத பணம் பறிமுதல்

எதற்கெடுத்தாலும் கோபம் கொள்ளும் குழந்தையை கையாள்வது எப்படி?

தவறு செய்யும் குழந்தைகளை இனிமேல் அடிக்காதீங்க…! Vd;

சிவப்பு அரிசியில் நிரம்பியுள்ள அதிகளவு நார்ச்சத்துக்கள்

மார்பக புற்றுநோய் நம்மை அண்டாமல் தடுக்க..!

TAGGED:disagreementfightmarriagerelationshipunderstandingஉறவுகருத்து வேறுபாடுசண்டைதிருமணம்புரிதல்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

ஆன்மீகம்

தேங்காய் தீபம் ஏற்றுவதனால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

By Nagaraj 1 Min Read

கிராமத்து சுவையில் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு செய்வோம் வாங்க!!!

By Nagaraj
தமிழகம்

36 அரசு அலுவலகங்களில் அதிரடி சோதனை: ரூ.1.73 கோடி கணக்கில் வராத பணம் பறிமுதல்

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சமையல் குறிப்புகள்

குழந்தைகள் விரும்பி சாப்பிட பழங்கள் சேர்த்த கேசரி செய்வோம் வாங்க!!!

சென்னை: பழம் சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு பழங்கள் சேர்த்து கேசரி செய்து கொடுத்தால் சாப்பிடுவார்கள். இந்த கேசரிக்கு சீசனில் கிடைக்கும் எல்லா…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

முகத்தில் பால் ஆடையை தொடர்ந்து அப்ளை செய்தால் கிடைக்கும் நன்மைகள்

சென்னை: முகத்தில் பால் ஆடை தடவி வந்தால் கிடைக்கும் பலன்கள் பற்றி தெரிந்து கொள்வோம். முகம் பளபளப்பாக மாறி விடும். இது…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

நன்மைகளை அள்ளித்தரும் ரோஸ் வாட்டர்… உபயோகப்படுத்தி பாருங்கள்!!!

சென்னை: கண்களை பாதுகாக்கிறது... ரோஸ் வாட்டரில் காணப்படும் ஆன்டி-பாக்டீரியல் பல அழகு நன்மைகளை தருகிறது. இது தூசு, மாசு, கண் சிவத்தல்,…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

இயற்கை முறையில் முகம் பளபளப்பாக இருக்க சில யோசனைகள்

சென்னை: பொதுவாக முகத்தை அழகாக வைத்திருக்க வேண்டும் என்பது அனைத்து பெண்களின் ஆசையாக இருக்கும். கரும்புள்ளிகள், பருக்கள் எதுவும் இல்லாமல் மிகவும்…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

உங்கள் அழகை இயற்கை முறையில் மேம்படுத்தணுமா? அப்போ இது உங்களுக்காகதான்

சென்னை: இயற்கை முறையில் பெண்களுக்கு தேவையான அழகு குறிப்புகள் குறித்த ஆலோசனை உங்களுக்காக. கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து…

By Nagaraj
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?