உக்ரைன்–ரஷியா இடையேயான போர் தொடர்ந்து நீடித்து வருகிறது.இரு நாடுகளும் ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வருகின்றன.
பல பகுதிகளில் குடியிருப்புகள் மற்றும் முக்கிய கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளன. தாக்குதல்களால் பொதுமக்கள் உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. போர் காரணமாக பதற்றமான சூழல் தொடர்ந்து நிலவி வருகிறது.
சமாதானப் பேச்சுவார்த்தைக்கான முயற்சிகளும் சர்வதேச அளவில் தொடர்கின்றன. போர் எப்போது முடிவுக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு உலக நாடுகளிடையே நீடிக்கிறது.
