காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடங்கியுள்ள ‘சத்யாகிரகா’ டிஜிட்டல் தளம், அரசியல் மற்றும் சமூக பிரச்சினைகளை பதிவு செய்யும் புதிய முயற்சியாக கவனம் பெற்றுள்ளது.
நாடு முழுவதும் தனிநபர்களாக போராடும் மக்கள் தங்களது பிரச்சினைகளை வெளிப்படுத்தவும், அவற்றை ஒருங்கிணைந்த முறையில் எடுத்துச் செல்லவும் இந்த தளம் உதவும் என ராகுல் காந்தி கூறியுள்ளார்.
குறிப்பாக Gen Z இளைஞர்கள், மாணவர்கள், விவசாயிகள், பழங்குடியினர் மற்றும் பெண்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் பிரச்சினைகள் இதில் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக வலைதளங்கள் அரசியல் தொடர்பாடலில் முக்கிய பங்கு வகித்து வரும் நிலையில், கட்சி சார்ந்த பிரசாரத்தைத் தாண்டி பொதுமக்களின் பிரச்சினைகளை டிஜிட்டல் முறையில் ஒருங்கிணைக்கும் முயற்சியாக இதனை காங்கிரஸ் முன்னெடுத்துள்ளது.
