புதுடெல்லி: வடகிழக்கு இந்தியாவில் ரயில்கள் மோதி யானைகள் உயிரிழப்பதைத் தடுக்கும் வகையில் ரயில்வே மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு குறிப்பிடத்தக்க பலன் கிடைத்துள்ளது.
2026 ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் 255 யானைகள் ரயில் விபத்துகளில் சிக்காமல் பாதுகாக்கப்பட்டுள்ளதாக வடகிழக்கு எல்லைப்புற ரயில்வே தெரிவித்துள்ளது.
இதற்காக செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான எச்சரிக்கை அமைப்புகள், ‘Plan Bee’ தொழில்நுட்பம், ரயில்களின் வேகக் கட்டுப்பாடு மற்றும் கூடுதல் கண்காணிப்பு நடவடிக்கைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
யானைகள் அதிகமாக நடமாடும் பகுதிகளில் ரயில்கள் செல்லும்போது முன்கூட்டியே எச்சரிக்கை வழங்கப்படுவதால், ஓட்டுநர்கள் வேகத்தைக் குறைத்து விபத்துகளைத் தவிர்க்க முடிகிறது.
அழிவின் விளிம்பில் உள்ள வனவிலங்குகளை பாதுகாக்க தொழில்நுட்பத்தை பயன்படுத்தியிருக்கும் இந்த முயற்சி சுற்றுச்சூழல் பாதுகாப்பு வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.
