புதுடெல்லி: இந்திய விமானப்படைக்கு ஆண்டுதோறும் 36 முதல் 40 போர் விமானங்கள் தேவைப்படுவதாக விமானப்படைத் தளபதி ஏர் சீஃப் மார்ஷல் ஏ.பி.சிங் தெரிவித்துள்ளார்.
விமானப்படையின் போர் திறனை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், குறிப்பாக தொலைதூர இலக்குகளைத் தாக்கும் Beyond Visual Range திறனை மேம்படுத்த வேண்டிய அவசியம் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதனிடையே பாகிஸ்தான் 5-ம் தலைமுறை போர் விமானத் திட்டத்தை முன்னெடுத்து வருவது குறித்து கவலை இருப்பதாகவும் விமானப்படைத் தளபதி குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் எதிர்கால வான்படை திறனை அதிகரிப்பதில் புதிய போர் விமானங்கள், ஆயுத அமைப்புகள் மற்றும் உள்நாட்டு தொழில்நுட்பத்தின் பங்கு முக்கியமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
