மும்பை: உலகளாவிய சந்தைகளில் காணப்படும் கலவையான நிலை மற்றும் உயர்ந்த நிலையில் நீடிக்கும் கச்சா எண்ணெய் விலை ஆகியவை இந்திய பங்குச்சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க பணவீக்கத் தரவுகள் வெளியாக உள்ள நிலையில், முதலீட்டாளர்களின் கவனமும் அடுத்தகட்ட பொருளாதார நடவடிக்கைகள் மீதும் திரும்பியுள்ளது. ஆசிய சந்தைகளிலும் கலவையான போக்கு காணப்படுவதால், இந்திய சந்தையில் வர்த்தகம் தொடங்கும்போது ஏற்ற இறக்கம் அதிகமாக இருக்கலாம் என சந்தை ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
