சென்னை: இளையராஜாவின் குடும்பத்தைச் சேர்ந்த ஜெயன் கதாநாயகனாக அறிமுகமாகும் ‘ராஜாஸ் பிளேலிஸ்ட்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
இளையராஜாவின் அண்ணன் ஆர்.டி. பாஸ்கரின் மகனான ஜெயன், இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். படத்திற்கு ‘ராஜாஸ் பிளேலிஸ்ட்’ என வித்தியாசமான தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் கதையை இயக்குநர் வெங்கட் பிரபு எழுதியுள்ளார். திரைக்கதை மற்றும் இயக்கத்தை சுஜித் என் சுப்ரமணியம் மேற்கொண்டுள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ரமணன் பாலகங்காதரன் தயாரிக்கும் இப்படத்தில் சோனா ஒலிக்கல் கதாநாயகியாக நடிக்கிறார்.
வாகை சந்திரசேகர், குரு சோமசுந்தரம் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இளையராஜாவின் இசைப் பயணம் மற்றும் அவரது பாடல்களை மையமாகக் கொண்டு படம் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இயக்குநர் சுதா கொங்கரா கிரியேட்டிவ் புரொட்யூசராக இணைந்துள்ளார்.
சமீபத்தில் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்திருந்த நிலையில், தற்போது டீசர் வெளியாகியுள்ளது. படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.
