புதுடெல்லி: ஏர் இந்தியா நிறுவனத்தைச் சேர்ந்த இரண்டு விமானிகளுக்கு நடத்தப்பட்ட முதற்கட்ட போதைப்பொருள் பரிசோதனையில் சந்தேகத்துக்குரிய முடிவுகள் கிடைத்ததைத் தொடர்ந்து, அவர்களின் மாதிரிகள் விரிவான ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளன.
புக்கெட்டில் இருந்து டெல்லி வந்த ஏர் இந்தியா விமானம் நடுவானில் திடீரென 300 அடி கீழே இறங்கிய சம்பவத்தில் 20 பேர் காயமடைந்தனர். இதையடுத்து விமானிகளிடம் போதைப்பொருள் பயன்பாடு தொடர்பான சோதனை நடத்தப்பட்டது.
அனைத்து விமானிகளுக்கும் போதைப்பொருள் பரிசோதனை நடத்த ஏர் இந்தியா நிர்வாகம் முடிவு செய்த நிலையில், இரண்டு விமானிகளின் மாதிரிகளில் சந்தேகத்துக்குரிய முடிவுகள் கிடைத்துள்ளன. இறுதி பரிசோதனை முடியும் வரை இருவரும் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
