ஐதராபாத்: ரவி தேஜா நடிப்பில் வெளியான ‘இருமுடி கட்டு’ திரைப்படம் உலகம் முழுவதும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்நிலையில், படம் வெளியான 12 நாட்களில் ரூ.200 கோடி வசூலை கடந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
சிவ நிர்வாணா இயக்கிய இப்படத்தில் பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். சாய் குமார், பேபி நக்ஷத்ரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படம் வெளியானது முதல் தொடர்ந்து நல்ல வசூலை ஈட்டி வருவதாக படக்குழு தெரிவித்துள்ளது.
