சென்னை: மாரி செல்வராஜின் மனைவி திவ்யா மாரி செல்வராஜ் தயாரிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘மாகாளி’ என பெயரிடப்பட்டுள்ளது. அயங்கரன் இண்டர்நேஷனல் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கப்படும் இப்படத்தில் அமீர் கதாநாயகனாக நடிக்கிறார்.
அறிமுக இயக்குநர் அரவிந்த் இப்படத்தை இயக்குகிறார். இவர் இயக்குநர் மாரி செல்வராஜின் உதவி இயக்குநராக பணியாற்றியவர். ‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’, ‘மாமன்னன்’ ஆகிய படங்களிலும் பணியாற்றியுள்ளார்.
ஸ்வாசிகா, அனிஷ்மா அனில் குமார், லெனின் பாரதி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார்.
இதன் அறிவிப்பு போஸ்டரில் அமீர் மொட்டைத் தலையுடன் கைலி, சட்டை அணிந்து எலும்புக்கூட்டின் மீது நடந்து வருவது போன்ற தோற்றத்தில் இடம்பெற்றுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.
