கேரளா: நடிகையாக பல்வேறு துணிச்சலான கதாபாத்திரங்களை தேர்வு செய்து தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கியுள்ள பார்வதி திருவோத்து, படம் இயக்குவதற்காக கடந்த 5 ஆண்டுகளாக காத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “புதிய படத்தை இயக்குவதற்காக 5 ஆண்டுகளாக காத்திருக்கிறேன். நல்ல தயாரிப்பாளர் கிடைப்பார் என ஆவலுடன் இருக்கிறேன். படத்திற்கான கதை எழுதும் பணிகள் முடிந்துவிட்டன. இன்னும் சில பணிகள் மட்டுமே உள்ளன. விரைவில் படப்பிடிப்பை தொடங்குவேன் என நம்புகிறேன். எனக்காக அனைவரும் பிரார்த்தனை செய்யுங்கள்” என்றார்.
மேலும், சினிமாவைத் தவிர வேறு எதுவும் தனக்கு தெரியாது என்றும், சினிமா தொடர்பான விஷயங்களிலேயே தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதாகவும் கூறியுள்ளார். ஒரு நடிகையாக தனக்கு கிடைக்கும் கதாபாத்திரங்களுக்கு சில வரம்புகள் இருப்பதாகவும் பார்வதி தெரிவித்துள்ளார்.
