By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    ஈரான் மோதலில் வெற்றி பெற்றால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக குறையும்: டிரம்ப்
    1 Min Read
    ஈரான் போரில் வெற்றி பெற்றால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக குறையும்: டிரம்ப்
    1 Min Read
    லெபனானில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல்: பெண்கள், குழந்தைகள் உள்பட 9 பேர் பலி
    1 Min Read
    விமானத்தில் பயணி அட்டகாசம்: சக பயணிகளை தாக்கியதால் விமானம் பால்டிமோருக்கு திருப்பிவிடப்பட்டது
    2 Min Read
    போருக்கான கூடுதல் வருவாயை திரட்ட ஆபாச தொழிலுக்கு சட்ட அங்கீகாரமா? உக்ரைன் நாடாளுமன்றத்தில் மசோதா
    3 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    மோடி விழாவுக்கு ‘புக் மை ஷோ’வில் இலவச பதிவு: ஒரு மணி நேரத்தில் அனைத்து இடங்களும் நிரம்பின
    1 Min Read
    ஆன்லைன் மோசடியில் பறிபோன ரூ.2.22 லட்சம்: 2 மணி நேரத்தில் மீட்ட போலீசார்
    1 Min Read
    பீகாரில் கனமழை, வெள்ளம்: 10 லட்சம் பேர் பாதிப்பு
    1 Min Read
    ரூ.1,322 கோடி கடன் மோசடி புகார்: ஜீ நிறுவனர் சுபாஷ் சந்திரா மீது சிபிஐ வழக்கு
    1 Min Read
    போலி ஐ.ஏ.எஸ் அதிகாரியாக நடித்து பல லட்சம் மோசடி: இளம்பெண் கைது
    2 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    பல்வேறு நோய்களை சரிசெய்யும் நட்சத்திர சோம்பு!
    1 Min Read
    காலையில் போட்ட பெர்மியூம் மாலையில் வரை மணக்க வேண்டுமா?
    2 Min Read
    புதிய ட்ரெண்ட்டாக வலம் வரும் ஜங்க் ஜூவல்லரி!
    2 Min Read
    செப்டம்பர் இறுதிக்குள் பணிகளை முடிக்க ஆணையாளர் சமீரன் உத்தரவு
    2 Min Read
    தினமும் உணவில் நெய் சேர்த்துக் கொள்வதால் ஏற்படும் நன்மை
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: செப்டம்பர் இறுதிக்குள் பணிகளை முடிக்க ஆணையாளர் சமீரன் உத்தரவு
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > தமிழகம் > செப்டம்பர் இறுதிக்குள் பணிகளை முடிக்க ஆணையாளர் சமீரன் உத்தரவு
தமிழகம்

செப்டம்பர் இறுதிக்குள் பணிகளை முடிக்க ஆணையாளர் சமீரன் உத்தரவு

Nagaraj
Last updated: September 8, 2026 6:00 pm
By Nagaraj 2 Min Read
Share
SHARE

சென்னை: வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் சென்னை மாநகராட்சி தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக அம்பத்தூர் மண்டலத்திற்குட்பட்ட பாடி பகுதியில் ரூ.44 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை சென்னை மாநகராட்சி ஆணையாளர் ஜி.எஸ்.சமீரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

சென்னை மாநகராட்சியின் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை திட்டத்தின் கீழ், ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுதவியுடன் இந்த மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கொசஸ்தலையாறு வடிநிலப் பகுதியில் அமைந்துள்ள இந்தத் திட்டம் அம்பத்தூர் மண்டலத்தில் உள்ள கொரட்டூர் கிழக்கு அவென்யூ பகுதியில் தொடங்குகிறது.

சுமார் 2.50 கிலோ மீட்டர் நீளத்திற்கு அமைக்கப்படும் இந்த மழைநீர் வடிகால், சென்னை–திருவள்ளூர் நெடுஞ்சாலை மற்றும் பாடி மேம்பாலம் பகுதி வழியாக அண்ணாநகர் மண்டலத்தில் உள்ள ஓட்டேரி நல்லா கால்வாயை சென்றடையும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதுவரை 1.90 கிலோ மீட்டர் நீளத்திற்கு மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன. மீதமுள்ள 600 மீட்டர் நீளத்திற்கு தற்போது பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

குறிப்பாக பாடி மேம்பாலம் அருகே நடைபெற்று வரும் வடிகால் அமைக்கும் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் ஜி.எஸ்.சமீரன் நேரில் பார்வையிட்டு அதிகாரிகளிடம் பணிகளின் முன்னேற்றம் குறித்து கேட்டறிந்தார்.

வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கு முன்பாக அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும் என்றும், குறிப்பாக மீதமுள்ள பணிகளை செப்டம்பர் மாத இறுதிக்குள் நிறைவு செய்ய வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.

பருவமழை காலங்களில் பாடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மழைநீர் தேங்குவதைத் தடுக்கும் நோக்கில் இந்தத் திட்டம் முக்கியத்துவம் பெறுகிறது.

வடிகால் பணிகள் முழுமையாக நிறைவடைந்தால் மழைநீர் விரைவாக வெளியேற்றப்பட்டு, சாலைகளில் ஏற்படும் நீர்தேக்கம் மற்றும் போக்குவரத்து பாதிப்பு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆய்வின்போது மண்டல அலுவலர் எம்.பி.தணிகைவேலன், மேற்பார்வைப் பொறியாளர்கள் திருமுருகன், பிரபாகரன், ஆசிய வளர்ச்சி வங்கியின் ஆலோசகர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனர்.

 

You Might Also Like

பல்வேறு நோய்களை சரிசெய்யும் நட்சத்திர சோம்பு!

காலையில் போட்ட பெர்மியூம் மாலையில் வரை மணக்க வேண்டுமா?

புதிய ட்ரெண்ட்டாக வலம் வரும் ஜங்க் ஜூவல்லரி!

தினமும் உணவில் நெய் சேர்த்துக் கொள்வதால் ஏற்படும் நன்மை

உடல் சோர்வை நீக்கும் தன்மை கொண்டது சுண்டைக்காய்

TAGGED:AmbatturGreater Chennai CorporationGS SameeranNortheast MonsoonPadiStorm Water Drainஅம்பத்தூர்சென்னை மாநகராட்சிபாடிமழைநீர் வடிகால்வடகிழக்குப் பருவமழைஜி எஸ் சமீரன்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சமையல் குறிப்புகள்

கிராமத்து சுவையில் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு செய்வோம் வாங்க!!!

By Nagaraj 1 Min Read

குழந்தைகள் விரும்பி சாப்பிட பழங்கள் சேர்த்த கேசரி செய்வோம் வாங்க!!!

By Nagaraj
ஆன்மீகம்

திருமணம் தடைபடுகிறதா இந்த பரிகாரத்தை செய்யுங்கள்

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
மகளிர் செய்திகள்`

முகத்தில் பால் ஆடையை தொடர்ந்து அப்ளை செய்தால் கிடைக்கும் நன்மைகள்

சென்னை: முகத்தில் பால் ஆடை தடவி வந்தால் கிடைக்கும் பலன்கள் பற்றி தெரிந்து கொள்வோம். முகம் பளபளப்பாக மாறி விடும். இது…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

நன்மைகளை அள்ளித்தரும் ரோஸ் வாட்டர்… உபயோகப்படுத்தி பாருங்கள்!!!

சென்னை: கண்களை பாதுகாக்கிறது... ரோஸ் வாட்டரில் காணப்படும் ஆன்டி-பாக்டீரியல் பல அழகு நன்மைகளை தருகிறது. இது தூசு, மாசு, கண் சிவத்தல்,…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

இயற்கை முறையில் முகம் பளபளப்பாக இருக்க சில யோசனைகள்

சென்னை: பொதுவாக முகத்தை அழகாக வைத்திருக்க வேண்டும் என்பது அனைத்து பெண்களின் ஆசையாக இருக்கும். கரும்புள்ளிகள், பருக்கள் எதுவும் இல்லாமல் மிகவும்…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

உங்கள் அழகை இயற்கை முறையில் மேம்படுத்தணுமா? அப்போ இது உங்களுக்காகதான்

சென்னை: இயற்கை முறையில் பெண்களுக்கு தேவையான அழகு குறிப்புகள் குறித்த ஆலோசனை உங்களுக்காக. கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

சரும பராமரிப்புக்கு உதவும் பாதாம் தோல் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

சென்னை: பாதாம் தோல் சரும பராமரிப்புக்கு சிறப்பான உதவிகளை செய்கிறது என்று தெரியுங்களா. தெரிந்து கொள்ளுங்கள். பாதாம் பருப்பை நிறைய பேர்…

By Nagaraj
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?