சென்னை: அஜித்குமார் – ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாக உள்ள ‘டேர் டெவில்’ திரைப்படத்தின் நடிகர்கள் தொடர்பாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
‘குட் பேட் அக்லி’ படத்தைத் தொடர்ந்து அஜித்குமார் மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கிறார். இப்படம் அஜித்தின் 64-வது படமாக உருவாகிறது. படப்பிடிப்பு நவம்பர் மாதம் தொடங்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இப்படத்தில் பிரபல மலையாள நடிகர் மோகன்லால் மற்றும் தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க இருப்பதாக ஏற்கெனவே தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்த நிலையில், மோகன்லால் தற்போது படத்தில் இடம்பெறவில்லை என்றும், அவருக்குப் பதிலாக ‘மார்கோ’ படத்தின் மூலம் கவனம் பெற்ற உன்னி முகுந்தன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் புதிய தகவல் வெளியாகியுள்ளது.
மோகன்லாலுக்காக பேசப்பட்டதாகக் கூறப்படும் அதே கதாபாத்திரத்தில் உன்னி முகுந்தன் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அப்படி நடந்தால், அஜித்குமார் – உன்னி முகுந்தன் இணையும் முதல் படமாக ‘டேர் டெவில்’ அமையும்.b எனினும், மோகன்லால் விலகியதாகவும் உன்னி முகுந்தன் இணைந்துள்ளதாகவும் வெளியாகியுள்ள தகவல்களுக்கு படக்குழு தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. இதனால் தற்போதைய தகவலை உறுதி செய்யப்படாத படத்தகவலாகவே பார்க்க வேண்டியுள்ளது.
மேலும் கன்னட திரையுலகைச் சேர்ந்த சில முன்னணி நடிகர்களிடம் முக்கிய கதாபாத்திரங்களுக்காக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
