புதுடெல்லி: சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் GST சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள கைது அதிகாரங்களை நீக்குவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக அக்டோபர் 7-ம் தேதி நடைபெற உள்ள GST கவுன்சில் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. வரி இணக்கத்தை எளிதாக்கவும், தொழில் நிறுவனங்களுக்கு ஏற்படும் சட்ட ரீதியான அழுத்தத்தை குறைக்கவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படலாம் என கூறப்படுகிறது.
இதற்கான சட்டத் திருத்தங்கள் தேவைப்பட்டால், நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரில் அவை கொண்டு வரப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த மாற்றம் நடைமுறைக்கு வந்தால் வர்த்தகர்கள் மற்றும் தொழில் துறையினருக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.
