புதுடெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி இன்று ‘சத்யாகிரகா’ என்ற புதிய டிஜிட்டல் தளத்தை தொடங்கியுள்ளார்.
நாடு முழுவதும் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் உரிமை தொடர்பான போராட்டங்களை ஒருங்கிணைக்கவும், அவற்றை பதிவு செய்யவும் இந்த தளம் பயன்படுத்தப்படும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
மாணவர்கள், விவசாயிகள், பழங்குடியினர், பெண்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்கும் வகையில் இந்த முயற்சி தொடங்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். மகாத்மா காந்தியின் சத்தியாகிரக கொள்கையை மேற்கோள் காட்டி, உண்மை மற்றும் ஒற்றுமையின் முக்கியத்துவத்தையும் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
வாக்காளர் பட்டியல் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் போராட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில், இந்த புதிய டிஜிட்டல் தளம் தொடங்கப்பட்டிருப்பது அரசியல் ரீதியாக கவனம் பெற்றுள்ளது.
