அகமதாபாத்: மும்பை–அகமதாபாத் புல்லட் ரயில் திட்டத்தில் முக்கியமான கட்டுமானப் பணிகளில் ஒன்றான சபர்மதி ஆற்றுப் பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
சுமார் 480 மீட்டர் நீளமுள்ள இந்தப் பாலம் 36 மீட்டர் உயரம் கொண்டதாகவும், சுமார் 12 மாடி கட்டிடத்தின் உயரத்துக்கு இணையானதாகவும் உள்ளது.
புல்லட் ரயில் பாதைக்கான பாலத்தில் ஆற்றுக்குள் அமைக்கப்படும் தூண்களின் எண்ணிக்கையை குறைக்கும் வகையில் நீண்ட இடைவெளி கொண்ட கட்டமைப்பு பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை–அகமதாபாத் அதிவேக ரயில் திட்டத்தின் கட்டுமானப் பணிகளில் பாலங்கள் மற்றும் சுரங்கப்பாதைகள் உள்ளிட்ட முக்கிய கட்டமைப்புகள் தொடர்ந்து உருவாக்கப்பட்டு வருகின்றன.
இந்தப் பாலம் திட்டத்தின் அடுத்தகட்ட பணிகளுக்கு முக்கிய அடித்தளமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
