நீண்ட தூர ரயில் பயணங்களில் தூய்மை மற்றும் பயணிகள் வசதியை மேம்படுத்த இந்திய ரயில்வே புதிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
40 மணி நேரத்துக்கும் மேலாக பயணம் செய்யும் 11 நீண்ட தூர ரயில்கள் சிறப்பு தூய்மை கண்காணிப்புக்காக அடையாளம் காணப்பட்டுள்ளன.
இதில் விவேக் எக்ஸ்பிரஸ், அவத் அசாம் எக்ஸ்பிரஸ், ஜீலம் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட நீண்ட தூர ரயில்கள் இடம்பெற்றுள்ளன. நீண்ட நேரம் பயணம் செய்யும் ரயில்களில் கழிவறை, பெட்டிகள், குப்பை அகற்றுதல் உள்ளிட்ட தூய்மை பணிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட உள்ளன.
நீண்ட தூர ரயில்களில் பயணிக்கும் பொதுமக்களின் முக்கிய புகார்களில் ஒன்றாக தூய்மை பிரச்சினை இருந்து வரும் நிலையில், இந்த நடவடிக்கை பயணிகளுக்கு ஓரளவு நிம்மதி அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
