இந்திய கார் சந்தையில் கடும் போட்டியை எதிர்கொள்ளும் வகையில் ஹோண்டா நிறுவனம் தனது இந்திய செயல்பாடுகளில் பெரிய மாற்றத்தை மேற்கொள்ள முடிவு செய்துள்ளது.
இதற்காக டாடா குழுமத்தைச் சேர்ந்த டாடா டெக்னாலஜீஸுடன் இணைந்து இந்திய சந்தைக்கேற்ற வாகனங்களை உருவாக்க ஹோண்டா திட்டமிட்டுள்ளது.
வாகன தயாரிப்பு செலவை சுமார் 20 சதவீதம் குறைப்பதும், புதிய வாகனங்களை உருவாக்கும் காலத்தை பாதியாகக் குறைப்பதும் நிறுவனத்தின் இலக்காக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2028-ம் ஆண்டில் 4 மீட்டருக்கும் குறைவான நீளமுடைய புதிய எஸ்யூவி காரை அறிமுகப்படுத்த ஹோண்டா திட்டமிட்டுள்ளதாகவும், அதன் பின்னர் மிட்-சைஸ் எஸ்யூவி உள்ளிட்ட புதிய மாடல்கள் வரலாம் என்றும் கூறப்படுகிறது.
