சென்னை: புதிய மற்றும் இளம் வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் இணைக்கும் வகையில் தேர்தல் ஆணையம் அக்டோபர் 7 முதல் 9-ம் தேதி வரை சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
முதல் முறையாக வாக்களிக்க தகுதி பெற்ற இளைஞர்களை அடையாளம் கண்டு வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கு சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது. இதற்காக பள்ளிகள், கல்லூரிகளில் உள்ள தேர்தல் கல்வியறிவு குழுக்கள் பயன்படுத்தப்பட உள்ளன.
நகர்ப்புறங்கள் மற்றும் பெருநகரங்களில் இளம் வாக்காளர்களின் பதிவு விகிதத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மாவட்ட அளவில் தேவைக்கு ஏற்ப அக்டோபர் 10-ம் தேதியும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன.
வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக அரசியல் கட்சிகள் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் சூழ்நிலையில், புதிய வாக்காளர்களைச் சேர்ப்பதற்கான தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கை முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இளைஞர்களின் வாக்காளர் பதிவு, அடுத்தடுத்த தேர்தல்களில் முக்கியமான அம்சமாக இருக்கும் என்பதால், அரசியல் கட்சிகளும் இளம் வாக்காளர்களை நோக்கி தங்கள் பிரசாரங்களை தீவிரப்படுத்தி வருகின்றன.
