சென்னை: குரு சோமசுந்தரம், அனுமோல் நடிப்பில் உருவான ‘பாரிஸ் கஃபே’ திரைப்படம் அக்டோபர் 9-ம் தேதி ஓடிடியில் வெளியாக உள்ளது. இப்படம் Aha தளத்தில் வெளியாகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
செப்டம்பர் 18-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படத்தை சராஜ் சீலன் இயக்கியுள்ளார். காதல், குடும்ப உறவுகள் மற்றும் கடந்த காலத்தில் மறைக்கப்பட்ட உண்மைகளை மையமாகக் கொண்டு கதை அமைந்துள்ளது.
திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கும் கவுதம் என்ற கதாபாத்திரத்தின் கடந்த கால ரகசியம் மீண்டும் வெளிவருவதால் குடும்பத்தில் ஏற்படும் மாற்றங்களைச் சுற்றி கதை நகர்கிறது.
திரையரங்க வெளியீட்டுக்குப் பிறகு தற்போது ஓடிடி ரசிகர்களை சந்திக்க தயாராகியுள்ளது.
