By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    3 நாட்களில் ரூ.101 கோடி வசூல் – தனுஷ் படத்திற்கு சாதனை
    0 Min Read
    ஈரான் அமெரிக்காவிடம் 290 பில்லியன் டாலர் இழப்பீடு கோரிக்கை
    0 Min Read
    பூடானில் பனிப்பாறை ஏரி வெள்ள அபாயத்தை குறைக்க குழு அமைப்பு
    0 Min Read
    அமெரிக்காவில் Grok செயற்கை நுண்ணறிவு நிறுவனத்திற்கு எதிராக வழக்கு
    0 Min Read
    சீன உளவாளிகள் போலி வேலைவாய்ப்புகள் மூலம் தகவல் சேகரிப்பு
    0 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    மேற்கு வங்கத்தின் பெயரை ‘பச்சிம் பங்கா’ என மாற்ற திட்டம்
    0 Min Read
    சபரிமலை தரிசன முன்பதிவில் மோசடி? அதிக விலைக்கு விற்பனை செய்ததாக புகார்
    1 Min Read
    ஓவைசிக்கு தவறான மரியாதை! உத்தரபிரதேச காவல்துறையில் சர்ச்சை
    0 Min Read
    தொகுதி மறுவரையறைக்கு 25 ஆண்டு தடை வேண்டும்! மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
    1 Min Read
    மேக் இன் இந்தியா மீது ஜெய்ராம் ரமேஷ் தாக்கு! இறக்குமதி சார்பு அதிகரித்ததாக குற்றச்சாட்டு
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    திருப்பரங்குன்றத்தில் கூட்டம் கூட தடை – மதுரையில் பாதுகாப்பு அதிகரிப்பு
    0 Min Read
    தமிழகத்தில் புலிகள் காப்பக விவகாரம் – அரசியல் சர்ச்சை
    0 Min Read
    அரசு அனுமதி இல்லாமலேயே அதிகாரிகள் மீது விசாரணை நடத்தலாம் – உயர்நீதிமன்றம்
    0 Min Read
    திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் அனுமதி
    0 Min Read
    புத்தக கொள்முதல் முறைகேடு புகார் – தமிழகத்தில் விசாரணை கோரிக்கை தீவிரம்
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: “70 வயது முதியவருக்கு புதிய நடை… சவாலான முழு மூட்டு மாற்று அறுவைசிகிச்சையில் தஞ்சை மீனாட்சி மருத்துவமனை சாதனை!”
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > தமிழகம் > “70 வயது முதியவருக்கு புதிய நடை… சவாலான முழு மூட்டு மாற்று அறுவைசிகிச்சையில் தஞ்சை மீனாட்சி மருத்துவமனை சாதனை!”
தமிழகம்

“70 வயது முதியவருக்கு புதிய நடை… சவாலான முழு மூட்டு மாற்று அறுவைசிகிச்சையில் தஞ்சை மீனாட்சி மருத்துவமனை சாதனை!”

Nagaraj
Last updated: October 8, 2026 2:37 pm
By Nagaraj 3 Min Read
Share
SHARE

தஞ்சாவூர்: மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 70 வயது முதியவருக்கு இடது மூட்டில் ஏற்பட்டிருந்த கடுமையான மற்றும் நீண்ட நாளைய குறைபாடுகளை, சவாலான முழு மூட்டு மாற்று அறுவைசிகிச்சை (TKA) மூலம் தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை வெற்றிகரமாக சரிசெய்து குணமாக்கியிருக்கிறது.

மூட்டழற்சி முற்றிய நிலையில் இருந்ததால், இடது காலில் கடுமையான வளைவு ஏற்பட்டு மூட்டு அசாதாரணமாகப் பின்னோக்கி வளைந்திருந்தது. சுமார் ஐந்து ஆண்டுகளாக இரண்டு முழங்கால் மூட்டுகளிலும் வலியாலும், நாளுக்கு நாள் அதிகரிக்கும் பாதிப்பாலும் அவதிப்பட்டு வந்த இந்த முதியவருக்கு (குறிப்பாக இடது கால் மூட்டில் பாதிப்பு அதிகம்) சீரமைப்பு அறுவைசிகிச்சை நடந்த மறுநாளே, இயன்முறை சிகிச்சை உதவியுடன் அறுவைசிகிச்சை செய்யப்பட்ட காலில் உடல் எடையைத் தாங்கி நிற்க முடிந்தது.

அவர் படிப்படியாக மூட்டுகளில் இயக்கத் திறனைத் திரும்பப் பெற்று, ஒரு மாதத்திற்குள் இயல்பாக நடக்கத் தொடங்கினார். நோயாளிக்கு கடுமையான எலும்புத் தேய்மானமும் இருந்ததால், எலும்புகள் பலவீனமடைந்து குறிப்பிடத்தக்க அளவிற்கு எலும்பு இழப்பும் தசைச் சிதைவும் ஏற்பட்டிருந்தன. இடது காலின் முழங்கால் எலும்பும் பகுதியளவு பின்னோக்கியும், மூட்டின் வெளிப்புறத்தை நோக்கியும் நகர்ந்திருந்தது. அறுவைசிகிச்சையின் போது, மூட்டைச் சுற்றியுள்ள எலும்பு வளர்ச்சிகள், தளர்வான சிதைவுகள் மற்றும் கடுமையாகச் சேதமடைந்த மூட்டுக் குருத்தெலும்புகள் உள்ளிட்ட பல சிதைவு மாற்றங்கள் இருப்பதையும் மருத்துவக் குழுவினர் கண்டறிந்தனர்.

மூட்டு மாற்று அறுவைசிகிச்சை (TKA) இடது மூட்டின் முக்கிய உருக்குலைவு குறைபாட்டை சரிசெய்தது. இந்த சிக்கலான மறுசீரமைப்பில் எலும்பு சேதத்தை சரிசெய்ய திருகு மற்றும் எலும்பு சிமெண்ட்டை பயன்படுத்தினர். மேலும், மூட்டு மாற்று உதிரிபாகத்துடன் இணைக்கப்படும் நீண்ட உலோக நீட்டிப்பான ‘டிபியல் எக்ஸ்டென்ஷன் ஸ்டெம்’மும் கூடுதல் நிலைத்தன்மையை வழங்குவதற்காகப் பொருத்தப்பட்டது.

எலும்பியல் துறை மூத்த ஆலோசகர் டாக்டர் கார்த்திகேயன் மகாராஜன், இணை ஆலோசகர்கள் டாக்டர் சண்முக ஹரிஹரன் மற்றும் டாக்டர் பாலகுருநாதன், மயக்க மருந்து நிபுணர் டாக்டர் அரி மாணிக்கம் ஆகியோரைக் கொண்ட குழுவுடன் இணைந்து, எலும்பியல் துறையின் துறைத் தலைவரும் மூத்த ஆலோசகருமான டாக்டர் கே. பார்த்திபன் இந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்டார். பல சிக்கலான படிநிலைகளைக் கொண்ட இந்த அறுவைசிகிச்சை, ஒரே மயக்க மருந்தளிப்பின் கீழ் சுமார் இரண்டரை மணி நேரத்தில் வெற்றிகரமாக முடிக்கப்பட்டது.

டாக்டர் பார்த்திபன் கூறுகையில், “நோயாளியின் வயது, கடுமையான எலும்புத் தேய்மானம், கணிசமான மூட்டுக் குறைபாடு மற்றும் எலும்பு சேதம் ஆகியவற்றின் காரணமாக இது ஒரு சவாலான செயல்முறையாக இருந்தது. குறைபாட்டைச் சரிசெய்தல், எலும்பு இழப்பைக் கையாளுதல் மற்றும் இரத்த இழப்பைக் கவனமாகக் கட்டுக்குள் வைத்தபடியே மூட்டு மாற்றுச் சாதனத்தை நிலையாகப் பொருத்துதல் ஆகிய சிக்கலான படிநிலைகளை இரண்டரை மணி நேரத்தில் வெற்றிகரமாக முடித்தோம். சிகிச்சைக்குப் பிறகு நோயாளி விரைவாக இயல்புநிலைக்கு திரும்பியிருப்பது ஊக்கமளித்திருக்கிறது. அறுவைசிகிச்சை நடந்த இரண்டாவது நாளிலேயே குறைந்த வலியுடன் அவரால் எழுந்து நிற்கவும் நடக்கவும் முடிந்தது சிகிச்சையின் வெற்றியை எடுத்துக்காட்டுகிறது” என்றார்.

காயம் ஏற்பட்டவுடன் தகுந்த நேரத்தில் மருத்துவ உதவியை நாட வேண்டியதன் அவசியத்தையும் மருத்துவர்கள் வலியுறுத்தினர். இந்த முதிய நோயாளிக்கு 20 ஆண்டுகளுக்கு முன்பு இடது கால் மூட்டில் காயம் ஏற்பட்டது. அதற்கு தகுந்த சிகிச்சை பெறாததால், பல ஆண்டுகளாக மூட்டின் நிலை படிப்படியாக மோசமடைந்து, இறுதியில் கடுமையான குறைபாட்டிற்கும், நடமாட்டம் பாதிக்கப்படுவதற்கும் வழிவகுத்துள்ளது என்பதை மருத்துவ நிபுணர்கள் சுட்டிக்காட்டினர்.

இந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போது தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையின் துணை மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் வி. பிரவீன் உடனிருந்தார்.

 

You Might Also Like

திருப்பரங்குன்றத்தில் கூட்டம் கூட தடை – மதுரையில் பாதுகாப்பு அதிகரிப்பு

தமிழகத்தில் புலிகள் காப்பக விவகாரம் – அரசியல் சர்ச்சை

அரசு அனுமதி இல்லாமலேயே அதிகாரிகள் மீது விசாரணை நடத்தலாம் – உயர்நீதிமன்றம்

திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் அனுமதி

புத்தக கொள்முதல் முறைகேடு புகார் – தமிழகத்தில் விசாரணை கோரிக்கை தீவிரம்

TAGGED:Elderly PatientKnee ReplacementMeenakshi Hospital ThanjavurSuccessful SurgeryTKA SurgeryTotal Knee Arthroplastyதஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனைமுதியவர் சிகிச்சைமுழு மூட்டு மாற்றுமூட்டு மாற்று அறுவைசிகிச்சைமேற்கு வங்க முதியவர்வெற்றிகர அறுவைசிகிச்சை
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

அரசியல் செய்திகள்

நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடிவடையாதது குறித்து காங்கிரஸ் விமர்சனம்

By Nagaraj 0 Min Read

பாஜகவின் புதிய அரசியல் அணுகுமுறை குறித்து விவாதம்

By Nagaraj
தமிழகம்

திருப்பரங்குன்றத்தில் கூட்டம் கூட தடை – மதுரையில் பாதுகாப்பு அதிகரிப்பு

By Nagaraj 0 Min Read
- Advertisement -
Ad image
இந்தியா

மேற்கு வங்கத்தின் பெயரை ‘பச்சிம் பங்கா’ என மாற்ற திட்டம்

மேற்கு வங்க மாநிலத்தின் பெயரை ‘பச்சிம் பங்கா’ என மாற்றுவதற்கான தீர்மானம் டிசம்பர் 9-ம் தேதி சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக…

By Nagaraj
தமிழகம்

தமிழகத்தில் புலிகள் காப்பக விவகாரம் – அரசியல் சர்ச்சை

தமிழகத்தில் புலிகள் காப்பகப் பகுதியில் நடந்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக அரசியல் கட்சிகள் இடையே விமர்சனங்கள் எழுந்துள்ளன. அனுமதியின்றி நீர்ப்பாசன கால்வாய்…

By Nagaraj
அரசியல் செய்திகள்

சோனியா காந்தியின் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் எதிர்க்கட்சிகள் சந்திப்பு

சோனியா காந்தியின் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் எதிர்க்கட்சிகளின் முக்கிய தலைவர்கள் பங்கேற்கும் நிகழ்வை மையமாக வைத்து அரசியல் விவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த…

By Nagaraj
அரசியல் செய்திகள்

வங்கதேச அரசியல் – ஷேக் ஹசீனா ஒப்படைப்பு விவகாரம்

வங்கதேசத்தில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தொடர்பான அரசியல் மற்றும் சட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து முக்கியத்துவம் பெற்று வருகின்றன. அவரை இந்தியாவில்…

By Nagaraj
அரசியல் செய்திகள்

தொகுதி மறுவரையறை விவகாரம் – அரசியல் கட்சிகளின் கவனம்

இந்தியாவில் தொகுதி மறுவரையறை தொடர்பான அரசியல் விவாதங்கள் மீண்டும் தீவிரமடைந்துள்ளன. நாடாளுமன்றத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மற்றும் தொகுதி மறுவரையறை தொடர்பான சட்ட…

By Nagaraj
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?