By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    கண்ணீருடன் விடைபெற்றார் மெஸ்ஸி! அர்ஜென்டினா ஜெர்சியில் கடைசி போட்டி
    1 Min Read
    பிரேசில் தேர்தலில் பரபரப்பு! போல்சனாரோ மகன் முன்னிலை… லூலாவுக்கு கடும் போட்டி
    0 Min Read
    பாகிஸ்தானில் இம்ரான் கான் ஆதரவாளர்கள் பேரணி! இஸ்லாமாபாத் நோக்கி நீண்ட பேரணி… அரசுக்கு புதிய நெருக்கடி
    0 Min Read
    தைவானில் பாருக்கு போலீஸ் சோதனை! சோதனைக்கு எதிர்ப்பு… “எல்லோருக்கும் பாதுகாப்பான நகரம்” என மேயர் உறுதி
    0 Min Read
    அமெரிக்காவில் பயங்கர துப்பாக்கிச்சூடு! வீட்டு விழாவில் துப்பாக்கி மழை… 2 பேர் பலி, 35 பேர் காயம்
    0 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    சிறு தொழில்களுக்கு ₹10,000 கோடி நிதி! மத்திய அமைச்சரவை அதிரடி ஒப்புதல்
    1 Min Read
    ஆந்திராவில் 21 மாவட்டங்களுக்கு வறட்சி அறிவிப்பு! 283 மண்டலங்கள் கடும் பாதிப்பு
    1 Min Read
    ரிசர்வ் வங்கி அதிரடி முடிவு! 4 ஆண்டுகளுக்கு பிறகு ரெப்போ வட்டி உயர்வு
    1 Min Read
    எஸ்.ஐ.ஆர். விவகாரம் – தேர்தல் ஆணையத்தை சந்திக்க எதிர்க்கட்சிகள் கோரிக்கை!
    1 Min Read
    தமிழக சட்டசபை சிறப்புரிமை வழக்கு முடித்து வைப்பு – உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு!
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    “70 வயது முதியவருக்கு புதிய நடை… சவாலான முழு மூட்டு மாற்று அறுவைசிகிச்சையில் தஞ்சை மீனாட்சி மருத்துவமனை சாதனை!”
    3 Min Read
    காவிரி நீர் பச்சை நிறமாக மாறியது! மாயனூரில் பரபரப்பு
    1 Min Read
    காவிரி தண்ணீரில் தமிழகத்துக்கு பெரும் பற்றாக்குறை! 36% மட்டுமே கிடைத்ததாக தகவல்
    1 Min Read
    ஊதிய உயர்வு கோரி போராடிய செவிலியர்கள் – போராட்டம் தற்காலிகமாக வாபஸ்!
    1 Min Read
    நாளை சென்னையில் ‘Windergy India 2026’ – காற்றாலை துறைக்கு புதிய கவனம்!
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: “70 வயது முதியவருக்கு புதிய நடை… சவாலான முழு மூட்டு மாற்று அறுவைசிகிச்சையில் தஞ்சை மீனாட்சி மருத்துவமனை சாதனை!”
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > தமிழகம் > “70 வயது முதியவருக்கு புதிய நடை… சவாலான முழு மூட்டு மாற்று அறுவைசிகிச்சையில் தஞ்சை மீனாட்சி மருத்துவமனை சாதனை!”
தமிழகம்

“70 வயது முதியவருக்கு புதிய நடை… சவாலான முழு மூட்டு மாற்று அறுவைசிகிச்சையில் தஞ்சை மீனாட்சி மருத்துவமனை சாதனை!”

Nagaraj
Last updated: October 8, 2026 2:37 pm
By Nagaraj 3 Min Read
Share
SHARE

தஞ்சாவூர்: மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 70 வயது முதியவருக்கு இடது மூட்டில் ஏற்பட்டிருந்த கடுமையான மற்றும் நீண்ட நாளைய குறைபாடுகளை, சவாலான முழு மூட்டு மாற்று அறுவைசிகிச்சை (TKA) மூலம் தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை வெற்றிகரமாக சரிசெய்து குணமாக்கியிருக்கிறது.

மூட்டழற்சி முற்றிய நிலையில் இருந்ததால், இடது காலில் கடுமையான வளைவு ஏற்பட்டு மூட்டு அசாதாரணமாகப் பின்னோக்கி வளைந்திருந்தது. சுமார் ஐந்து ஆண்டுகளாக இரண்டு முழங்கால் மூட்டுகளிலும் வலியாலும், நாளுக்கு நாள் அதிகரிக்கும் பாதிப்பாலும் அவதிப்பட்டு வந்த இந்த முதியவருக்கு (குறிப்பாக இடது கால் மூட்டில் பாதிப்பு அதிகம்) சீரமைப்பு அறுவைசிகிச்சை நடந்த மறுநாளே, இயன்முறை சிகிச்சை உதவியுடன் அறுவைசிகிச்சை செய்யப்பட்ட காலில் உடல் எடையைத் தாங்கி நிற்க முடிந்தது.

அவர் படிப்படியாக மூட்டுகளில் இயக்கத் திறனைத் திரும்பப் பெற்று, ஒரு மாதத்திற்குள் இயல்பாக நடக்கத் தொடங்கினார். நோயாளிக்கு கடுமையான எலும்புத் தேய்மானமும் இருந்ததால், எலும்புகள் பலவீனமடைந்து குறிப்பிடத்தக்க அளவிற்கு எலும்பு இழப்பும் தசைச் சிதைவும் ஏற்பட்டிருந்தன. இடது காலின் முழங்கால் எலும்பும் பகுதியளவு பின்னோக்கியும், மூட்டின் வெளிப்புறத்தை நோக்கியும் நகர்ந்திருந்தது. அறுவைசிகிச்சையின் போது, மூட்டைச் சுற்றியுள்ள எலும்பு வளர்ச்சிகள், தளர்வான சிதைவுகள் மற்றும் கடுமையாகச் சேதமடைந்த மூட்டுக் குருத்தெலும்புகள் உள்ளிட்ட பல சிதைவு மாற்றங்கள் இருப்பதையும் மருத்துவக் குழுவினர் கண்டறிந்தனர்.

மூட்டு மாற்று அறுவைசிகிச்சை (TKA) இடது மூட்டின் முக்கிய உருக்குலைவு குறைபாட்டை சரிசெய்தது. இந்த சிக்கலான மறுசீரமைப்பில் எலும்பு சேதத்தை சரிசெய்ய திருகு மற்றும் எலும்பு சிமெண்ட்டை பயன்படுத்தினர். மேலும், மூட்டு மாற்று உதிரிபாகத்துடன் இணைக்கப்படும் நீண்ட உலோக நீட்டிப்பான ‘டிபியல் எக்ஸ்டென்ஷன் ஸ்டெம்’மும் கூடுதல் நிலைத்தன்மையை வழங்குவதற்காகப் பொருத்தப்பட்டது.

எலும்பியல் துறை மூத்த ஆலோசகர் டாக்டர் கார்த்திகேயன் மகாராஜன், இணை ஆலோசகர்கள் டாக்டர் சண்முக ஹரிஹரன் மற்றும் டாக்டர் பாலகுருநாதன், மயக்க மருந்து நிபுணர் டாக்டர் அரி மாணிக்கம் ஆகியோரைக் கொண்ட குழுவுடன் இணைந்து, எலும்பியல் துறையின் துறைத் தலைவரும் மூத்த ஆலோசகருமான டாக்டர் கே. பார்த்திபன் இந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்டார். பல சிக்கலான படிநிலைகளைக் கொண்ட இந்த அறுவைசிகிச்சை, ஒரே மயக்க மருந்தளிப்பின் கீழ் சுமார் இரண்டரை மணி நேரத்தில் வெற்றிகரமாக முடிக்கப்பட்டது.

டாக்டர் பார்த்திபன் கூறுகையில், “நோயாளியின் வயது, கடுமையான எலும்புத் தேய்மானம், கணிசமான மூட்டுக் குறைபாடு மற்றும் எலும்பு சேதம் ஆகியவற்றின் காரணமாக இது ஒரு சவாலான செயல்முறையாக இருந்தது. குறைபாட்டைச் சரிசெய்தல், எலும்பு இழப்பைக் கையாளுதல் மற்றும் இரத்த இழப்பைக் கவனமாகக் கட்டுக்குள் வைத்தபடியே மூட்டு மாற்றுச் சாதனத்தை நிலையாகப் பொருத்துதல் ஆகிய சிக்கலான படிநிலைகளை இரண்டரை மணி நேரத்தில் வெற்றிகரமாக முடித்தோம். சிகிச்சைக்குப் பிறகு நோயாளி விரைவாக இயல்புநிலைக்கு திரும்பியிருப்பது ஊக்கமளித்திருக்கிறது. அறுவைசிகிச்சை நடந்த இரண்டாவது நாளிலேயே குறைந்த வலியுடன் அவரால் எழுந்து நிற்கவும் நடக்கவும் முடிந்தது சிகிச்சையின் வெற்றியை எடுத்துக்காட்டுகிறது” என்றார்.

காயம் ஏற்பட்டவுடன் தகுந்த நேரத்தில் மருத்துவ உதவியை நாட வேண்டியதன் அவசியத்தையும் மருத்துவர்கள் வலியுறுத்தினர். இந்த முதிய நோயாளிக்கு 20 ஆண்டுகளுக்கு முன்பு இடது கால் மூட்டில் காயம் ஏற்பட்டது. அதற்கு தகுந்த சிகிச்சை பெறாததால், பல ஆண்டுகளாக மூட்டின் நிலை படிப்படியாக மோசமடைந்து, இறுதியில் கடுமையான குறைபாட்டிற்கும், நடமாட்டம் பாதிக்கப்படுவதற்கும் வழிவகுத்துள்ளது என்பதை மருத்துவ நிபுணர்கள் சுட்டிக்காட்டினர்.

இந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போது தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையின் துணை மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் வி. பிரவீன் உடனிருந்தார்.

 

You Might Also Like

காவிரி நீர் பச்சை நிறமாக மாறியது! மாயனூரில் பரபரப்பு

காவிரி தண்ணீரில் தமிழகத்துக்கு பெரும் பற்றாக்குறை! 36% மட்டுமே கிடைத்ததாக தகவல்

ஊதிய உயர்வு கோரி போராடிய செவிலியர்கள் – போராட்டம் தற்காலிகமாக வாபஸ்!

நாளை சென்னையில் ‘Windergy India 2026’ – காற்றாலை துறைக்கு புதிய கவனம்!

ஜம்மு-காஷ்மீரில் அதிரடி நடவடிக்கை! சட்டவிரோத குடியேறிகள் மீது நடவடிக்கை

TAGGED:Elderly PatientKnee ReplacementMeenakshi Hospital ThanjavurSuccessful SurgeryTKA SurgeryTotal Knee Arthroplastyதஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனைமுதியவர் சிகிச்சைமுழு மூட்டு மாற்றுமூட்டு மாற்று அறுவைசிகிச்சைமேற்கு வங்க முதியவர்வெற்றிகர அறுவைசிகிச்சை
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

ஜெயிலர் 2 ஆடியோ லாஞ்ச் இல்லை! ரஜினிக்காக ‘சூப்பர் ஷோ’ நடத்தும் படக்குழு

By Nagaraj 0 Min Read

நாளை ஓடிடியில் ‘பாரிஸ் கஃபே’! குரு சோமசுந்தரம் படத்துக்கு டிஜிட்டல் வெளியீடு

By Nagaraj
தமிழகம்

“70 வயது முதியவருக்கு புதிய நடை… சவாலான முழு மூட்டு மாற்று அறுவைசிகிச்சையில் தஞ்சை மீனாட்சி மருத்துவமனை சாதனை!”

By Nagaraj 3 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

டோரதி’ படத்துக்கு மாரி செல்வராஜ் பாராட்டு! “பெரும் மனநிறைவை கொடுத்த படம்”

சென்னை: கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ‘டோரதி’ திரைப்படம் தொடர்ந்து திரையுலகினரின் கவனத்தை ஈர்த்து வருகிறது. படத்தை பார்த்த…

By Nagaraj
சினிமா

ரூ.150 கோடி வசூலைத் தாண்டிய ‘மண்டாடி’!

சென்னை: சூரி, சுஹாஸ் நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் நல்ல வரவேற்பை பெற்ற ‘மண்டாடி’ திரைப்படம் இன்று, அக்டோபர் 8-ம் தேதி நெட்ஃபிளிக்ஸ்…

By Nagaraj
சினிமா

ஜெயிலர் 2-க்கு UA 16+ சான்றிதழ்! 2 மணி 45 நிமிடங்கள் ஓடும் ரஜினி படம்

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படத்துக்கு சென்சார் சான்றிதழ் கிடைத்துள்ளது. படத்துக்கு UA…

By Nagaraj
அரசியல் செய்திகள்

“வாக்காளர் பட்டியல் பாதுகாக்கப்பட வேண்டும்” — புதிய வாக்காளர்களுக்காக தேர்தல் ஆணையம் சிறப்பு நடவடிக்கை

சென்னை: புதிய மற்றும் இளம் வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் இணைக்கும் வகையில் தேர்தல் ஆணையம் அக்டோபர் 7 முதல் 9-ம் தேதி…

By Nagaraj
Uncategorized

“வாக்காளர் பட்டியல் பாதுகாக்கப்பட வேண்டும்” — புதிய வாக்காளர்களுக்காக தேர்தல் ஆணையம் சிறப்பு நடவடிக்கை

சென்னை: புதிய மற்றும் இளம் வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் இணைக்கும் வகையில் தேர்தல் ஆணையம் அக்டோபர் 7 முதல் 9-ம் தேதி…

By Nagaraj
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?