சென்னை: பெண்களின் ஆரோக்கியத்திற்கு பெரும் பங்கு வகிக்க்கிறது பப்பாளி பழம். இவற்றில் இருக்கும் ஆரோக்கிய நன்மைகள் ஏராளம். அதேபோல் பப்பாளி விதைகளிலும் பல ஆரோக்கிய நன்மைகள் இருக்கின்றது ஆனால் பல பேருக்கு அதன் நன்மைகள் பற்றி தெரிவதில்லை
பப்பாளி பழம் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுகிறோம். அதேபோல் பப்பாளி காய்களிலும் பொறியலாக செய்து சமைத்து சாப்பிடுகிறோம் ஆனால் அதன் விதைகளை யாரும் கண்டு கொள்வதில்லை. ஆனால் அதன் விதைகளிலும் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் அடங்கியுள்ளது. பப்பாளி விதைகள் நம் ஆரோக்கியத்திற்கு எவ்வாறு உதவுகிறது.
பப்பாளி விதைகளில் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள், பிளேவனாய்டுகள், பாலிபீனால், மற்றும் மைக்ரோ நியூட்ரியன் போன்ற வேதிப்பொருட்கள் நிறைந்துள்ளது. பப்பாளி விதைகளில் இருக்கும் கொழுப்பு அமிலங்கள் உடலில் உள்ள கெட்ட கொழுப்பலின் கரைக்க பெரும் அளவில் உதவுகிறது. பப்பாளி விதைகளில் நிறைந்திருக்கும் நார்ச்சத்து செரிமானத்தை சீராக்குவதுடன் உடலில் படிந்திருக்கும் நச்சுக்கலையும் வெளியேற்றுகிறது.
பப்பாளி விதைகளில் நிறைந்திருக்கும் கரோட்டின் நம் உடலில் ஏற்படும் ஹார்மோன் உற்பத்தியை சமநிலைப்படுத்துவதற்கு பெரிதும் பயன்படுகிறது. இதன் மூலம் சீரற்ற மாதவிடாய் பிரச்சனைக்கு தீர்வு தருகிறது. மேலும் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வயிற்று வலியை குறைக்கிறது.
பப்பாளி விதைகளில் உள்ள வேதிப்பொருட்கள் கிருமிகளை எதிர்த்து போராடும் திறன் கொண்டது. சருமத்தில் ஏற்படும் நாள் பட்ட அலர்ஜிகளை குணமாக்கும் தன்னை கொண்டது. எனவே பப்பாளி விதைகளை உட்கொள்ளுவதன் மூலம் சரும பிரச்சனைகள் இருந்து நல்ல தீர்வை காணலாம்.