உக்ரைனில் ரஷ்யா நடத்திய மிகப்பெரிய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலில் 25 பேர் உயிரிழந்ததாகவும், 100 பேர் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கீவ் உள்ளிட்ட பல பகுதிகள் தாக்குதலுக்கு உள்ளாகின. ஏராளமான ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டதாக உக்ரைன் தரப்பு தெரிவித்துள்ளது. கூடுதல் வான் பாதுகாப்பு அமைப்புகள் தேவை என அதிபர் வொலோடிமிர் ஜெலன்ஸ்கி வலியுறுத்தியுள்ளார்.
