இந்தோனேசியாவின் போர்னியோ தீவில் தொடர்ந்து ஏற்படும் காட்டுத்தீ மற்றும் அதனால் உருவாகும் புகைமூட்டம் தொடர்பாக அரசு மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
காட்டுத்தீயை கட்டுப்படுத்துவதில் அரசு போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், ஆண்டுதோறும் தீ விபத்துகள் மீண்டும் மீண்டும் ஏற்படுவதைத் தடுக்க நிர்வாகம் தவறிவிட்டதாகவும் சுற்றுச்சூழல் அமைப்புகள் குற்றம்சாட்டியுள்ளன.

காட்டுத்தீ காரணமாக காற்றின் தரம் பாதிக்கப்பட்டு பொதுமக்களின் உடல்நலத்துக்கும் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
