தேவையான பொருட்கள்:
இறால் – 500 கிராம்
உப்பு – ருசிக்கேற்ப
மஞ்சள் தூள் – சிறிதளவு
மிளகு – 1 தேக்கரண்டி
சீரகம் – 1 டீஸ்பூன்
எண்ணெய் – 2-3 டேபிள்ஸ்பூன்
சோம்பு – 1 டீஸ்பூன்
பட்டை – 1 அங்குலம்
வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
மிளகாய் – 2
கரம் மசாலா – 1 டீஸ்பூன்
செய்முறை:
முதலில், இறாலை நன்கு கழுவவும். பின்னர் சுத்தம் செய்த இறாலை ஒரு பாத்திரத்தில் எடுத்து, அதனுடன் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து தனியே வைக்கவும். பிறகு மிக்ஸி ஜாரில் மிளகு, சீரகம் சேர்த்து நன்றாக அரைக்கவும். பிறகு ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, சோம்பு சேர்த்து தாளிக்கவும்.
பின் வெங்காயம் சேர்த்து சிறிது வதக்கி, அதன் பின் இஞ்சி பூண்டு விழுது, கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். அடுத்து அரைத்த மிளகு சீரகத் தூள், கரம் மசாலா, சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கிளறவும். அதன் பிறகு, ஊறவைத்த இறாலை சேர்த்து கிளறி, 1/4 கப் தண்ணீர் ஊற்றி, இறாலை 7-8 நிமிடம் கொதிக்க வைத்தால், சுவையான செட்டிநாடு இறால் பெப்பர் பிரை ரெடி.