அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆகிய மூன்று தலைவர்களும் சீனாவின் ஷென்சென் நகரில் நவம்பர் 19-ம் தேதி முக்கிய முத்தரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளனர். ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டின் பின்னணியில் நடைபெறும் இந்தச் சந்திப்பு சர்வதேச அரசியலில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
உக்ரைன் போர், ஈரான் விவகாரம், அமெரிக்கா – சீனா வர்த்தக மோதல், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், அணு ஆயுதக் கட்டுப்பாடு உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் குறித்து ஆலோசிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சீன அதிபர் ஜி ஜின்பிங், மேற்கத்திய நாடுகளின் வர்த்தகப் பாதுகாப்புக் கொள்கைகளை விமர்சித்துள்ளார். அதேபோல் ரஷ்ய அதிபர் புதினும் உக்ரைன் போரைத் தொடர்ந்து ரஷ்யா மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகள் பயனளிக்கவில்லை எனக் கருத்து தெரிவித்துள்ளார்.
உலகின் முக்கிய வல்லரசுகளின் தலைவர்கள் ஒரே மேடையில் சந்திப்பதால், இந்தப் பேச்சுவார்த்தையின் முடிவுகள் சர்வதேச வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு நிலவரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
