தெலுங்கு நடிகர் விஷ்ணு மஞ்சு, இயக்குநர் பிரபுதேவா இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாக உள்ளார்.
அவரது பிறந்தநாளை முன்னிட்டு ‘VM24’ என்ற பெயரில் திரைப்படம் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலக ரசிகர்களிடையே இந்த அறிவிப்பு கவனத்தை பெற்றுள்ள நிலையில், படத்தின் கதைக்களம் மற்றும் பிற நடிகர்கள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
