தேவையான பொருட்கள்:
பொடியாக நறுக்கிய தர்பூசணி – 3 கப்,
பால் – 2 கப்,
சர்க்கரை – அரை (அ) முக்கால் கப்,
ஃப்ரெஷ் கிரீம் – 150 கிராம் (கடைகளில் கிடைக்கும்),
ரோஸ் எசன்ஸ் – கால் டீஸ்பூன்.
செய்முறை:
நன்கு காய்ச்சப்பட்ட பாலில் சர்க்கரையை கரைக்கவும். பொடித்த தர்பூசணியைச் சேர்த்து மிக்ஸியில் அடித்துக் கொள்ளவும். ஃப்ரெஷ் கிரீம் மற்றும் எசென்ஸ் சேர்க்கவும். இந்தக் கலவையை காற்றுப் புகாத அலுமினியப் பெட்டியில் நிரப்பி ஃப்ரீசரில் வைக்கவும். அரை மணி நேரம் கழித்து எடுத்து மிக்ஸியில் அடித்து மீண்டும் அடிக்கவும். நல்ல ஐஸ்கிரீமாக செட் ஆனதும், அதை எடுத்து தூள் தர்பூசணியால் அலங்கரித்து பரிமாறவும்.