தேவையான பொருட்கள்:
புளி – 2 கப்
இளநீர் – 2 கப்
சர்க்கரை – ஒன்றரை கப்
நெய் – கால் கப்
முந்திரி – 2 மேசைக்கரண்டி
பச்சை கற்பூரம் – ஒரு சிட்டிகை
பருப்பு – கால் கப்
தேங்காய் பால் – ஒரு கப்
தேங்காய்பல் – 2 டேபிள்ஸ்பூன்
செய்முறை: ஒரு கடாயில் பருப்பை வறுத்து, பச்சரிசியுடன் சேர்த்து கழுவவும். இந்த இரண்டையும் குக்கரில் போட்டு அதனுடன் இரண்டு மடங்கு தண்ணீர் மற்றும் இளநீர் சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து குக்கர் மூன்று விசில் வரும் வரை கொதிக்க விடவும்.
பிரஷர் வெளியானதும் குக்கரை திறந்து அதில் சர்க்கரை தேங்காய்ப்பால் சேர்த்து நன்கு கிளறவும்.
பிறகு தேங்காய் துருவலை நெய்யில் வறுத்து முந்திரியை வறுத்த பொங்கலுடன் சேர்க்கவும். ஏலக்காய் மற்றும் குங்குமப்பூ இங்கு தேவையில்லை, ஏனெனில் அவை இளநீரின் இயற்கையான வாசனையைக் கெடுத்து விடும்.
இப்போது இளநீர் பொங்கல் தயார்.. ஆனால் பரிமாறும் முன் பச்சை கற்பூரம் சேர்த்து கலந்து பரிமாறவும்.