சென்னை: சர்க்கரை நோய் வந்து விட்டாலே ஆசையாக விரும்பி சாப்பிட்ட உணவுகளையும் சாப்பிடவே முடியாது. அரிசி உணவை தொடவே கூடாது. அரிசி இல்லையென்றாலும் சுவையான உணவு பல வகை இருக்குங்க. சர்க்கரை நோயாளிகள் இந்த உணவுகளை சாப்பிடலாம்.
காலை நேரத்திற்கு கடலை மாவுடன் புதிதாக வெட்டிய காய்கறிகளுடன் செய்யப்படும் ஊத்தாப்பம் சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த உணவாக அமையும். ஆனால் குறைந்த எண்ணெய் மட்டுமே உபயோகப்படுத்த வேண்டும்.
சிறுதானிய இட்லி: பல வகையான சிறுதானியாங்களான வரகு, திணை, கோதுமை, கேழ்வரகு, வெந்தயம் ஆகிய கலந்து அரைக்கப்பட்ட மாவு தற்போது சூப்பர் மார்க்கெட்டில் கிடைக்கிறது. ஆவியில் வேகும் என்பதால் எண்ணெய் இல்லாத ஆரோக்கியமான காலை உணவாக இது அமையும்.
வெந்தயக் கீரை பரோட்டா: வெந்தயம், சர்க்கரை நோயாளிக்களுக்கான சிறந்த மருந்தாக கருதப்படுகிறது. வெந்தயக் கீரையை பொறியல் செய்து அதை பரோட்டாவில் பூரணமாக வைத்து செய்யுங்கள். அட்டகாசமான ஆரோக்கியமான உணவு தயார்.
பனீர் பரோட்டா: அமெரிக்க நீரிழிவு நோய்க்கான அமைப்பு சர்க்கரை நோயாளிகளுக்கு நம் நாட்டின் பனீர் தான் சிறந்த சீஸ் வகையென கூறியுள்ளது. கொழுப்பு இல்லாத சீஸ் வகைதான் சாப்பிட உகந்ததது இதை மல்டிகிரேன் பரோட்டாவுடன் சேர்த்து செய்து பனீர் பரோட்டாவாக சாப்பிடுங்கள்.
ஸ்பரவுட்ஸ் சாலட்: முளைக்கட்டிய பச்சை பயிறுடன், வெங்காயம், தக்காளியுடன் தேவையான அளவு உப்பு மிளகுத்தூள் தூவி சாப்பிடுங்கள். முளைகட்டிய பயரில் அதிக அளவு புரதச்சத்து இருப்பதால் மிகவும் நல்லது.
ஓட்ஸ் ஆம்லேட்: வெறும் ஓட்ஸ் கஞ்சியை குடிப்பதற்கு பதில் அதில் புதிதாக வெட்டப்பட்ட காய்கறிகளையும் வெங்காயம், தக்காளியுடன் முட்டை சேர்த்து செய்யப்படும் ஆம்லேட்டாக சாப்பிடலாம்.