விழுப்புரம்: தமிழகத்தில் உயர்கல்வி தரம் சரியில்லை என ஆளுநர் ஆர்.என். ரவியின் கருத்துக்கு அமைச்சர் பொன்முடி பதிலளித்துள்ளார்.
விழுப்புரத்தில் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், ”உயர்கல்வியில் தமிழகம் போன்ற மாநிலம் இல்லை என்பதை நிரூபித்துள்ளோம்.
தமிழகத்தில் பாடத்திட்டத்துக்கென தனி குழு அமைக்கப்பட்டு, அறிவியல் பாடத்திட்டத்தை உருவாக்கியுள்ளோம். சர்வதேச அளவில் தமிழகத்தின் கல்வித்தரம் உயர்ந்துள்ளது தெரியாமல் சிலர் பேசி வருகின்றனர்.
மாநில பாடத்திட்டத்தில் பற்றாக்குறை இல்லை. இருமொழிக் கொள்கையால் தமிழகத்தில் கல்வி அறிவு நன்றாக வளர்ந்துள்ளது. மற்ற மாநிலங்களை விட தமிழகத்தின் கல்வித்தரம் உயர்ந்துள்ளது. அரசுப் பள்ளிகளின் தரம் காரணமாக பலர் உயர்ந்த இடங்களுக்குச் சென்றுவிட்டனர்.
இஸ்ரோவில் உள்ள வீரமுத்துவேல், விழுப்புரம் அரசு பள்ளியில் படித்தவர். கல்வியின் தரத்தை மேலும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,” என்றார்.