புது தில்லியில் நடைபெற்ற ஆசிய-பசிபிக் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர்கள் மாநாட்டில், கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவின் விமானப் போக்குவரத்துத் துறையில் ஏற்பட்டுள்ள பெரும் முன்னேற்றங்களை பிரதமர் நரேந்திர மோடி எடுத்துரைத்தார். ஒவ்வொருவரும் விமானத்தில் பயணம் செய்யும் வாய்ப்பு உள்ளதாகவும், இது விரிவடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
உடான் திட்டத்தின் கீழ் 14 மில்லியன் மக்கள் விமானத்தில் பயணம் செய்துள்ளதாகவும், இத்துறையின் வளர்ச்சி பொதுமக்களை மகிழ்ச்சியடையச் செய்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவின் தொழில்நுட்ப மற்றும் உள்கட்டமைப்பு முன்னேற்றங்களை ஆசிய-பசிபிக் பிராந்தியத்துடன் பகிர்ந்து கொள்வதில் பெருமிதம் கொள்வதாக மோடி கூறினார்.
ஆசியாவில் புத்தரின் புனித ஸ்தலங்களை இணைக்கும் சர்வதேச புத்தர் சர்க்யூட் மூலம் பயணிகளுக்கும் நாடுகளுக்கும் அதிக நன்மைகளை உருவாக்கும் முயற்சியை மோடி வலியுறுத்தினார்.