பழங்காலத்திலிருந்தே இந்திய உணவு வகைகளில் நெய் ஒரு முக்கிய அங்கமாக இருந்து வருகிறது. எந்த உணவாக இருந்தாலும் சிறிது நெய் சேர்த்தால் கூடுதல் சுவை கிடைக்கும். இது உங்கள் ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும்.
ஆனால் தினசரி உணவில் நெய்யை பயன்படுத்துவது உடலுக்கு நல்லதா? அல்லது தீங்கு விளைவிப்பதா? என பல கேள்விகள் உள்ளன. இவை அனைத்திற்கும் பதிலளிக்கும் விதமாக, நெய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள் பற்றி இங்கு விரிவாக அறிந்து கொள்வோம்.
நெய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்: நெய்யை உணவில் சேர்த்துக் கொண்டால், எண்ணற்ற பலன்கள் கிடைக்கும். குறிப்பாக காலையில் உணவில் சிறிது நெய் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் குளிர்ச்சியும் உடல் சூடு குறையும். குறிப்பாக குழந்தைகளின் நினைவாற்றல் அதிகரிக்கிறது.
நெய்யில் உடலுக்கு நன்மை செய்யும் ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் புரதம் நிறைந்துள்ளது. இது உடலில் உள்ள தேவையற்ற சத்துக்களை அகற்றி இதய ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.