சென்னை: பச்சைமிளகாயில் அருமையாக குழம்பு செய்வது பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருள்கள் :
பச்சை மிளகாய் – 16
குட மிளகாய் – 2
தக்காளி – 2
சீரகம் – 2 ஸ்பூன்
சின்ன வெங்காயம் – 16
எண்ணெய் – தேவையான அளவு
உளுந்தம் பருப்பு – 1/2 ஸ்பூன்
புளி – சிறிது
வெந்தயம் – 2 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
செய்முறை: முதலில் பச்சை மிளகாய் மற்றும் குட மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவேண்டும் . பிறகு புளியை தண்ணீர் ஊற்றி கரைத்து கொள்ளவேண்டும். வெங்காயம் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவேண்டும் .
அதன் பின் வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுந்தம் பருப்பு, வெந்தயம், சீரகம் போட்டு தாளித்த பின் வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவேண்டும் . பிறகு வெங்காயம் நன்றாக வதங்கியதும் பச்சை மிளகாய் மற்றும் குட மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவேண்டும் .
அடுத்து அதில் தக்காளியை சேர்த்து வதக்கி தேவையான அளவு உப்பை போடவும். பின்னர் கரைத்து வைத்துள்ள புளிக்கரைசலை ஊற்றி சிறிது நேரம் கொதிக்க விடவேண்டும் . பின்பு மிளகாய் நன்றாக வெந்து எண்ணெய் பிரிந்து வரும் போது இறக்கி பரிமாறவும். காரசாரமான பச்சை மிளகாய் குழம்பு தயார்.