சிவகங்கை: இலங்கை தமிழர்களுக்கு தனி நாடு பெற வேண்டும் என்பதே எனது ஆசை என்று மதுரை ஆதீனம் கூறினார்.
சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தியில் செய்தியாளர்களை சந்தித்த மதுரை ஆதீனம் கூறியிருப்பதாவது:-
மீனவர்கள் பிரச்சனையில் மத்திய அரசு தலையிட்டு அனைவரையும் விடுதலை செய்ததை மத்திய அரசையும், மாநில அரசையும் பாராட்டுகிறேன்.
கச்சத்தீவை மத்திய, மாநில அரசுகள் இணைந்து போராடி மீட்க வேண்டும்.
தமிழர்களை கொன்று குவித்த இலங்கை அரசை கண்டிக்கணும். மீனவர்களை சிறைபிடித்து ரூ.1 கோடி அபராதம் விதித்தார்கள்.
இலங்கையில் தற்போது பதவியேற்றுள்ள பிரதமர் நல்லவராக இருக்கிறார். இந்த நேரத்தில் இலங்கை தமிழர்களுக்கு தனி நாடு பெற வேண்டும் என்பதே எனது ஆசை என்று கூறினார்.