புளோரிடா: அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தை தாக்க ‘மில்டன்’ சூறாவளி பயங்கரமாக வருகிறது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தை 10 நாட்களுக்கு முன் தாக்கிய ஹெலன் சூறாவளியால் 25 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது அதைவிட சக்திவாய்ந்த மில்டன் சூறாவளி புளோரிடாவை தாக்க வருவதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மணிக்கு 250 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் சூறை காற்றுடன் புளோரிடாவை நோக்கிவரும் மில்டன் சூறாவளி, ஹெலன் சூறாவளியை விட அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும் என அம்மாநில கவர்னர் எச்சரித்துள்ளார்.
வெள்ள பாதிப்புகளிலிருந்து தற்காத்து கொள்ள மணல் மூட்டைகளை ஆயத்தம் செய்யும் பணிகளை மக்கள் மேற்கொண்டுவருகின்றனர்.