புதுடெல்லி: வரி வருவாயில் இருந்து மாநில அரசுகளுக்கு ரூ.1,78,173 கோடியை வரி பகிர்ந்தளிப்பதாக மத்திய அரசு நேற்று அறிவித்தது. இதில், தமிழகத்துக்கு குறைந்த தொகையும், பா.ஜ.க ஆளும் உத்தரபிரதேசத்துக்கு அதிக தொகையும் ஒதுக்கப்பட்டுள்ளது.
மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகம் உள்ளிட்ட 28 மாநிலங்களுக்கு நிதி வழங்குவதற்காக ரூ.1,78,173 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. இதில் வழக்கமான முன்பணம் மற்றும் 2024 அக்டோபரில் வழங்கப்படும் தவணை ஆகியவை அடங்கும்.
பண்டிகைக் காலத்தில், மாநிலங்கள் மூலதனச் செலவினங்களைத் துரிதப்படுத்தவும், மாநிலங்களின் வளர்ச்சி மற்றும் நிதித் திட்டங்களுக்கான செலவினங்களுக்கு நிதியளிக்கவும் இந்த வரிப் பகிர்வு வெளியிடப்பட்டுள்ளது. இதில் உத்தரப் பிரதேசத்துக்கு ரூ.17,921 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
பீகாருக்கு ரூ.13,404 கோடி, மஹாராஷ்டிராவுக்கு ரூ.11,255 கோடி, ராஜஸ்தானுக்கு ரூ.10,737 கோடி, தமிழகத்துக்கு ரூ.7,268 கோடி, அதைத் தொடர்ந்து மொத்தம் ரூ.7,211 கோடியும், ஆந்திரா, கர்நாடகாவுக்கு ரூ.6,498 கோடி, தெலுங்கானாவுக்கு ரூ.3,745 கோடி, கேரளாவுக்கு ரூ.3,430 கோடியும் நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.