இஸ்லாமாபாத்: சுரங்கத் தொழிலாளர்கள் மீது தாக்குதல்… பாகிஸ்தானில் துப்பாக்கி ஏந்திய பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், சுரங்கத்தொழிலாளர்கள் 20 பேர் கொல்லப்பட்டனர். 7 பேர் பலத்த காயமுற்றனர்.
பாகிஸ்தானின் தென்மேற்கு மாகாணமான பலுசிஸ்தானில், நிலக்கரி சுரங்கம் ஒன்று இயங்கி வருகிறது. இங்கு தொழிலாளர்கள் வழக்கம் போல், பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, அவர்கள் மீது ஆயுதம் ஏந்திய நபர்கள் சரமாரியாக தாக்குதல் நடத்தினர்.
இதில், சுரங்கத்தொழிலாளர்கள் 20 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 7 பேர் பலத்த காயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.