சென்னையில் அக்டோபர் 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் கனமழை மற்றும் மிக கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
அந்த அறிவிப்பின்படி, தென்கிழக்கு மற்றும் தெற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. கடந்த இரண்டு நாட்களாக மத்திய கிழக்கு அரபிக் கடல் மற்றும் கர்நாடகா – கோவா கடற்பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இன்று காலை 08.30 மணியளவில் மத்திய கிழக்கு அரபிக்கடலுக்கு நகர்ந்தது.
அக்டோபர் 11 ஆம் தேதி தமிழகம், புதுவை, காரைக்காலில் பல இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். மேலும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அக்டோபர் 12, 13, 14 ஆகிய தேதிகளில் மிதமான மழை பெய்யும் என்றும், சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது, மேலும் மழை மற்றும் கனமழை தொடர்ந்தால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம்.