நியூயார்க்: அமெரிக்காவில் அதிக சம்பளம் வாங்கும் டாப் 10 சிஇஓக்களின் பட்டியலை சி சூட் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிகேஷ் அரோரா இந்தப் பட்டியலில் உள்ளார். நிகேஷ் அரோரா பாலோ ஆல்டோ நெட்வொர்க்கின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் தலைவர் ஆவார். 2023-ல் 266 மில்லியன் டாலர்கள் (ரூ. 2,200 கோடிகள்) மற்றும் இந்தப் பட்டியலில் 10-வது இடத்தைப் பிடித்துள்ளது.
எலான் மஸ்க் 1.4 பில்லியன் டாலர் (ரூ.11,600 கோடி) சம்பளத்துடன் முதலிடத்தில் உள்ளார். பலந்திர் டெக்னோலஜி சிஇஓ அலெக்சாண்டர் கார்ப் $1.1 பில்லியன் (ரூ. 9,130 கோடி) சம்பளத்துடன் 2-வது இடத்திலும், ப்ராட்காம் சிஇஓ ஹாக் டான் $767 மில்லியன் (ரூ. 6,350 கோடி) வருமானத்துடன் 3-வது இடத்திலும் உள்ளனர்.
இந்த பட்டியலில் இந்திய வம்சாவளி கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை மற்றும் மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லா இடம்பெறவில்லை.
நிகேஷ் அரோரா தனது பள்ளிப்படிப்பை டெல்லியில் முடித்துவிட்டு பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் எலக்ட்ரானிக் இன்ஜினியரிங் பட்டம் பெற்றார்.
அதன் பிறகு அமெரிக்காவில் படிப்பை முடித்துவிட்டு கூகுளில் சேர்ந்தார். பின்னர், சாப்ட்பேங்கில் பணிபுரிந்தார். அவர் 2018-ல் பாலோ ஆல்டோ நெட்வொர்க்கின் தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்றார்.