சென்னை: வெள்ளை எள்ளில் கால்சியம் அதிகமாக உள்ளதால் இது பெண்களுக்கு மிகவும் நல்லது. வெள்ளை எள் மற்றும் வேர்கடலையை பயன்படுத்தி சத்தான சுவையான லட்டு வீட்டிலேயே ஈசியா எப்படி செய்வது என்பதை தெரிந்துகொள்வோம்.
வெள்ளை எள் – 100 கிராம்,
வேர்க்கடலை – 50 கிராம்,
சர்க்கரை – 100 கிராம்,
முந்திரிப்பருப்பு – 10.
செய்முறை: வெள்ளை எள்ளையும், வேர்க்கடலையையும் தனித்தனியாக வெறும் வாணலியில் வறுத்துக்கொண்டு பொடி செய்துகொள்ள வேண்டும். வேர்க்கடலையில் தோலை நீக்கித்தான் வறுக்க வேண்டும். முந்திரியை சிறு துண்டுளாக்க வேண்டும்.
சர்க்கரையை தேவையான தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து கெட்டியான பாகாக காய்ச்சி பொடி செய்தவைகளையும் முந்திரியையும் போட்டுக்கிளறி கீழே இறக்கி சிறிது ஆறியதும் சிறு சிறு உருண்டைகளாக பிடிக்க வேண்டும்.