ஈரானின் எந்தப் பகுதிக்கும் தங்கள் படைகள் சென்று தாக்குதல் நடத்த முடியும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இஸ்ரேல் ராணுவத்தில் புதிதாக இணைந்த அதிகாரிகள் முன்னிலையில் பேசிய அவர், “சமீபத்தில் ஈரான் மீதான தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேலுக்கு எல்லையற்ற சுதந்திரம் கிடைத்துள்ளது.
ஈரான் அணு ஆயுதங்களை வாங்குவதைத் தடுக்க இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளுக்கும் ராணுவத்துக்கும் முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதுவே அவர்களின் இறுதி இலக்கு.” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், ஈரானுக்கு ஆதரவாக இஸ்ரேலின் பாதுகாப்பு கட்டமைப்புகளை உளவு பார்த்ததாக இருவர் கைது செய்யப்பட்டு ராணுவத்தால் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.