பாடாலூர்: பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா இரூர் கிராமத்தில் வயலில் இன்று காலை வேப்ப மரத்தில் திடீரென பால் கசிய தொடங்கியது. இதை பார்த்து அந்த பகுதியில் வயல் வேலைக்கு சென்ற பெண்கள் பரவசம் அடைந்தனர்.
இதையறிந்த அங்கு திரண்ட பெண்கள் உடனடியாக மரத்தைச் சுற்றி மஞ்சள் தூவி, வேப்ப மரத்தில் மஞ்சள், சந்தனம் தடவி குங்குமம் வைத்து தீபம் ஏற்றி அபிஷேகம் செய்து கற்பூரம் ஏற்றி வழிபட்டனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பரவியதால் சுற்றுவட்டார கிராம மக்கள் திரளாக வந்து வேப்ப மரத்தை வழிபட்டனர். இதனால், அப்பகுதி முழுவதும் பரபரப்பான சூழல் நிலவியது.