சென்னை: சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜைகள் இன்று முதல் துவங்குகிறது. இதனை முன்னிட்டு பக்தர்கள் இன்று முதல் மாலை அணிவித்து விரதத்தை தொடங்குகின்றனர். இதற்காக சென்னையில் உள்ள ஐயப்பன் கோவில்களில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அண்ணாநகர் அய்யப்பன் கோவிலில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. மாலை அணிவிக்க ரூ.10 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மகாலிங்கபுரம் ஐய்யப்பன் கோயிலில் அதிகாலை 4.30 மணிக்கு கணபதி ஹோமம், தொடர்ந்து ஆயுஷ் ஹோமம், நவக்கிரக ஹோமம் நடைபெறுகின்றன.
அதன்பின் பக்தர்கள் மாலை அணிவிப்பர். ராஜா அண்ணாமலைபுரம் கோயிலிலும் மண்டல பூஜை தொடங்குகிறது. மேலும், பக்தர்கள் மாலை அணிவிக்கவும், இருமுடியுடன் 18 படிகள் ஏறவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.