சென்னை எழும்பூர் ரயில் நிலையம் மேம்பாட்டு பணிகள் காரணமாக, 3 விரைவு ரயில்கள், தற்காலிகமாக தாம்பரத்தில் இருந்து இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இது தொடர்பாக, தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்தியில், எழும்பூர் ரயில் நிலைய மற்றும் சென்ட்ரல் நடைமேடை விரிவாக்க பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அங்கு மாற்றங்கள் செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக, பல ரயில்கள் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படவுள்ளன.
சென்னை எழும்பூர் – ராஜஸ்தான் ஜோத்பூர் விரைவு ரயில் (22663): நவ. 23 முதல், தாம்பரத்தில் இருந்து பிற்பகல் 2:50 மணிக்கு இயக்கம்.
ஜோத்பூர் – எழும்பூர் விரைவு ரயில் (22664): நவ. 26 முதல், தாம்பரத்துக்கு இயக்கப்படும்.
சென்னை எழும்பூர் – நாகர்கோவில் விரைவு ரயில் (12667): நவ. 21 முதல், தாம்பரத்தில் இருந்து இரவு 7:30 மணிக்கு இயக்கம்.
நாகர்கோவில் – எழும்பூர் விரைவு ரயில் (12668): நவ. 22 முதல், தாம்பரத்திலிருந்து இயக்கப்படும்.
சென்னை எழும்பூர் – செங்கோட்டை சிலம்பு விரைவு ரயில் (20681): நவ. 20 முதல், தாம்பரத்தில் இருந்து இரவு 8:55 மணிக்கு இயக்கம்.
மேலும், செங்கோட்டை – தாம்பரம் விரைவு ரயில் (20682) நவ. 21 முதல் தாம்பரத்திற்கு மட்டுமே இயக்கப்படும்.
இவை அனைத்தும் தற்காலிக மாற்றங்கள் என்பதால், மறுஉத்தரவு வரும் வரை இந்த மாற்றங்கள் தொடரும்.